கருணை பொங்கும் கண்கள் (23)

கருணை பொங்கும் கண்கள்
என்னை பார்க்குமா என்னை பார்க்குமா
உன்னை நினைத்து நினைத்து உருகும்
நெஞ்சம் குளிருமா தாகம் சேர்க்குமா
சக்தி உந்தன் உருவத்திலே மனசு மலருதே
மாசு இல்லா உன் இதயத்திலே உயிர்கள் வாழுதே...

கருணை பொங்கும் கண்கள்
என்னை பார்க்குமா என்னை பார்க்குமா
உயிரிலும் உணர்விலும் உனை பிரியாத நிலை கொடு...
உயிரிலும் உணர்விலும் உனை பிரியாத நிலை கொடு...
அதை நாளும் நாளும் என் மனம் போற்றி வணங்கவே
சொல்லி சொல்லி என் உள்ளும் சக்தி பொங்கவே
உன்னை பார்த்த நேரத்திலே பாசம் பிறக்குதே...
மாசு இல்லா உன் இதயத்திலே உயிர்கள் வாழுதே...

கருணை பொங்கும் கண்கள்
என்னை பார்க்குமா என்னை பார்க்குமா...

சக்தி சக்தி என்று சொல்லி நாங்கள் வந்தோம்
உன்தன் வாசலுக்கு கூ...
பக்தியுடன் பாட்டு பாடி..
தாயே வந்தோம் அம்மா வாசலுக்கு...
ஆடி தேரில் ஆடிப் பாட காட்சி தந்தவளே...
மஞ்சள் முகம் கொண்டவளே
மஹா சக்தி தேவி நீயே ...
உன்னை பார்த்த நேரத்திலே பாசம் பிறக்குதே...
மாசு இல்லா உன் இதயத்திலே உயிர்கள் வாழுதே

கருணை பொங்கும் கண்கள்
என்னை பார்க்குமா என்னை பார்க்குமா
உன்னை நினைத்து நினைத்து உருகும்
நெஞ்சம் குளிருமா தாகம் சேர்க்குமா
சக்தி உந்தன் உருவத்திலே மனசு மலருதே
மாசு இல்லா உன் இதயத்திலே உயிர்கள் வாழுதே…
கருணை .. பொங்கும் கண்கள்
என்னை பார்க்குமா என்னை பார்க்குமா ...
Favourite songs
October 21, 2023
0

Search

Contact Me