ஆத்தா உன் சேல – அந்த ஆகாயத்தப் போல (13)

ஆத்தா உன் சேல – அந்த
ஆகாயத்தப் போல
தொட்டில் கட்டித் தூங்க
தூளி கட்டி ஆட
ஆத்துல மீன் புடிக்க
அப்பனுக்கு தல தொவட்ட
பாத்தாலே சேத்தணைக்கத் தோணும் – நான்
செத்தாலும் என்னப் போத்த வேணும்
செத்தாலும் என்னப் போத்த வேணும்

ஆத்தா உன் சேல – அந்த 
ஆகாயத்தப் போல  ஆத்தா உன் சேல…

ஆ.. இடுப்புல கட்டிக்கிட்டு நீச்சல் பழகினதும்
உஞ்சேலதானே வண்ணப் பூஞ்சோலதானே
வெறுந்தர விரிப்புல நான் படுத்துக் கெடந்ததுவும்
உஞ்சேலதானே வண்ணப் பூஞ்சோலதானே (2)

ஈரச்சேலை காயும் போது வானவில்லா தெரியும்
இத்துப்போன சேலையில் உன் சோகக்கதை புரியும்
கஞ்சி கொண்டு போகையிலே சும்மாடா இருக்கும் – நீ
சேலகட்டி இறச்ச தண்ணி சக்கரையா இனிக்கும்
சேலகட்டி இறச்ச தண்ணி சக்கரையா இனிக்கும்

ஆத்தா உன் சேல – அந்த 
ஆகாயத்தப் போல  ஆத்தா உன் சேல…

அக்கா கட்டி பழகினதும் ஆடு கட்டி மேச்சதுவும்
உஞ்சேலதானே வண்ணப் பூஞ்சோலதானே
வெக்கையில விசிரியாகும் வெயிலுக்குள்ள குடையாகும்
உஞ்சேலதானே வண்ணப் பூஞ்சோலதானே (2)

பொட்டிக்குள்ள மடிச்சு வெச்சேன் அழகு முத்து மாலை
காயம் பட்ட வெரல்களுக்கு கட்டுப்போடும் சேல
மயிலிறகா உஞ்சேல மனசுக்குள்ள விரியும்
வெளுத்த சேலத்திரி வெளக்குப் போட்டா எரியும்
வெளுத்த சேலத்திரி வெளக்குப் போட்டா எரியும்

ஆத்தா உன் சேல – அந்த 
ஆகாயத்தப் போல 
தொட்டில் கட்டித் தூங்க 
தூளி கட்டி ஆட 
ஆத்துல மீன் புடிக்க 
அப்பனுக்கு தல தொவட்ட 
பாத்தாலே சேத்தணைக்கத் தோணும் – நான் 
செத்தாலும் என்னப் போத்த வேணும் ஓய்
செத்தாலும் என்னப் போத்த வேணும் 
செத்தாலும் என்னப் போத்த வேணும் 
செத்தாலும் என்னப் போத்த வேணும் 
செத்தாலும் என்னப் போத்த வேணும் 

Favourite songs
October 17, 2023
0

Search

Contact Me