மாலை எனை வாட்டுது மணநாளை மனம் தேடுது (12)

மாலை எனை வாட்டுது

மணநாளை மனம் தேடுது 🎬

மாலை எனை வாட்டுது

மணநாளை மனம் தேடுது


நாட்கள் நகராதோ

பொழுதும் போகாதோ

நாட்கள் நகராதோ

பொழுதும் போகாதோ

மாலை எனை வாட்டுது

மணநாளை மனம் தேடுது


விழி வாசல் தேடி 

நீ கோலம் போட

வாழ்வெல்லாம் கூடி 

நாம் ராகம் பாட

விழி வாசல் தேடி 

நீ கோலம் போட

வாழ்வெல்லாம் கூடி 

நாம் ராகம் பாட

மயில் உன்னைத் தழுவ 

விரும்புகிறேன்

குயில் தனை இழந்து 

புலம்புகிறேன்

இளமையும் தூங்காதா இல்லை

இதயமும் தூங்காதா

தாகமும் தணியாதா எந்தன்

மோகமும் தீராதா


மாலை எனை வாட்டுது

மணநாளை மனம் தேடுது


உன் கோவில் சேர 

பூத்திட்ட பூ நான்

உன் நெஞ்சில் ஆட 

பூஜையும் எந்நாள்

உன் கோவில் சேர 

பூத்திட்ட பூ நான்

உன் நெஞ்சில் ஆட 

பூஜையும் எந்நாள்

நினைவினில் ஆடும் 

என் கண்ணின் ஓரம்

நீ வந்து நின்றால் 

அது சுகமாகும்

தலைவனை அழைத்திடவா

மடியைத் தலையணை ஆக்கிடவா

இரு கரம் சேர்த்திடவா

இல்லை எனையே ஈர்த்திடவா


மாலை நமை வாட்டுது

மணநாளை இமை தேடுது

மாலை நமை வாட்டுது

மணநாளை இமை தேடுது


நாட்கள் நகராதோ

பொழுதும் போகாதோ

நாட்கள் நகராதோ

பொழுதும் போகாதோ


மாலை நமை வாட்டுது

மணநாளை இமை தேடுது

Favourite songs
October 16, 2023
0

Search

Contact Me