அழகே அழகு தேவதை
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்
கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் ரெண்டும்
கேள்வியானது
பொன்முகம் தாமரை
பூக்களே கண்களோ
மனக்கண்கள் சொல்லும்
பொன்னோவியம்
அழகே அழகு தேவதை
சிப்பி போல இதழ்கள் ரெண்டும்
மின்னுகின்றன
சேர்ந்த பல்லின் வரிசை யாவும்
முல்லை போன்றன
மூங்கிலே தோள்களோ
தேன்குழல் விரல்களோ
ஒரு அங்கம் கைகள் அறியாதது
அழகே அழகு தேவதை
பூ உலாவும் கொடியைப் போல
இடையைக் காண்கிறேன்
போகப் போக வாழை போல
அழகைக் காண்கிறேன்
மாவிலை பாதமோ
மங்கை நீ வேதம்
இந்த மண்ணில் இது போல்
பெண்ணில்லையே
Related Posts
Favourite songs
October 16, 2023
0