யாரும் அத பாக்கலியே
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா? வருமா…? வீட்டுக்குள்ள
காடே மணக்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல
வழி நெடுக காட்டுமல்லி …
வழி நெடுக காட்டுமல்லி
கண்பார்க்கும் கவனமில்லை
பூக்குற நேரம் தெரியாது
காத்திருப்பேன் நான் சலிக்காது
பூ மணம் புதுசா தெரியுதம்மா
என் மனம் கரும்பா இனிக்குதம்மா
வழி நெடுக காட்டுமல்லி…
கனவெனக்கு வந்ததில்லை
இது நிசமா கனவு இல்ல
கனவா போனது வாழ்க்க இல்ல
வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்ததில்ல
மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள
போகுற வருகிற நினைவுகளே
ஒறங்குது உள்ளே ஒரு விசயம்
ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்
காத்திருப்பேன் நான் திரும்பி வர
காட்டுமல்லியில அரும்பெடுக்க
வழி நெடுக காட்டுமல்லி
கண்பார்க்கும் கவனமில்லை
காடே மணக்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல…
கிட்ட வரும் நேரத்துல
எட்டி போற தூரத்துல
நீ இருக்க
உள்ளுக்குள்ள
உன்ன விட்டு போவதில்ல
ஒலகத்தில் எங்கோ மூலையில
இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள
இறு சிறு உசிரு துடிக்கிறது
நெசமா யாருக்கும் தெரியாது
சாட்சி சொல்லும் இந்தக் காடறியும்
காட்டுல வீசிடும் காத்தறியும்
வழி நெடுக காட்டுமல்லி
கண் பார்த்தும் கவனமில்லை
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா? வருமா? வீட்டுக்குள்ள
பூ மணம் புதுசா தெரியுதம்மா
என் மனம் கரும்பா இனிக்குதம்மா
வழி நெடுக காட்டுமல்லி…
Related Posts
Favourite songs
October 17, 2023
0