அமுத மழை பொழியும் முழு நிலவிலே (20)

அமுத மழை பொழியும் முழு நிலவிலே
ஒரு அழகுச்சிலை உடல் முழுதும் நனைந்ததே
அடடா ஓர் தேவனையும் மயக்கிடும்
எந்த ஐந்தறிவு ஜீவன்களும் ரசித்திடும்

பூப்போட்ட புதுச்சேலை உடுத்தி
ஒரு பூஞ்சோலையே நடந்ததசைந்து
எந்தன் உயிரோடு உறவாடும் தென்றலே
உந்தன் தளிர்ப்பூவின் இதழ் மோதிச் சென்றதே
விழித்தபடி பார்த்ததிந்த கனவு
நான்... விழித்தபடி பார்த்ததிந்த கனவு
என்ன விந்தையென்று புரியவில்லை எனக்கு

அமுத மழை பொழியும் முழு நிலவிலே
ஒரு அழகுச்சிலை உடல் முழுதும் நனைந்ததே

மேனகையின் மறுவடிவம் எடுத்து
மணிமேகலையை சிறு இடையில் தொடுத்து
மேகம் என கருங்கூந்தல் முடித்து
இந்த பூமிமகள் நோகாமல் நடந்து
ஒரு மலர்த்தேரே வடம் இன்றி வந்ததோ
எந்தன் விழி என்ன பெரும்பாக்கியம் செய்ததோ

அமுத மழை பொழியும் முழு நிலவிலே
ஒரு அழகுச்சிலை உடல் முழுதும் நனைந்ததே
அடடா ஓர் தேவனையும் மயக்கிடும்
எந்த ஐந்தறிவு ஜீவன்களும் ரசித்திடும்
Favourite songs
October 18, 2023
0

Search

Contact Me