Nallavarkellam Satchigal

 ம்ம்...ம்ம்...ம்ம்...
ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்...
ம்..ம்ம்...ம்ம் ம்..ம்...

நல்லவர்க்கெல்லாம்...
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா..
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்
தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா..

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
தெய்வத்தின் சாட்சியம்மா...

நதி வெள்ளம் காய்ந்துவிட்டால்
நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறே யாரம்மா..
நதி வெள்ளம் காய்ந்துவிட்டால்
நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறே யாரம்மா..
பறவைகளே.... பதில் சொல்லுங்கள்....
மனிதர்கள் மயங்கும் போது
நீங்கள் பேசுங்கள்..
மனதுக்கு மனது கொஞ்சம் தூது செல்லுங்கள்..

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனசாட்சி..
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா..
தெய்வத்தின் சாட்சியம்மா..

ஆண்டவன் அறிய நெஞ்சில்
ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை..
ஆண்டவன் அறிய நெஞ்சில்
ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை..
மனிதனம்மா... மயங்குகிறேன்..
தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே..
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே..

நல்லவர்க்கெல்லாம்..
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனசாட்சி..
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்
தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா

ம்ம்ம்.. ம்ம்..ம்ம்..ம்ம்
ம்ம்ம்.. ம்ம்..ம்ம்..ம்ம்...

Favourite songs
October 19, 2024
0

Search

Contact Me