நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு



ஆ: நீங்காத எண்ணம் ஒன்று
நெஞ்சோடு உண்டு

பெ: ம் ஹஹா என்னங்க அது

ஆ: ஒரு ஷாஜஹான் ஒரு தேவதாஸ்
அது போலத்தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வர வேண்டும் ம்

பெ: நீங்காத எண்ணம் ஒன்று
நெஞ்சோடு உண்டு
ஒரு ஜானகி ஒரு கண்ணகி
அது போலத்தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வர வேண்டும் ம்

ஆ: மேகம் மிதக்குது
ஆகாயம் மேலே பறக்குது
மேகம் மிதக்குது
ஆகாயம் மேலே பறக்குது

பெ: ஆ..

ஆ: அது போலவே உனைக் காண
நான் அலை பாய்கிறேன்
பெ: லல லல லல லா
மழையாக மாறுவேன்
மடி மீது சேருவேன்
நீராட்டுவேன் உன் மேனியை
அன்பே உன் உறவினை அனுபவிப்பேன்

ஆ: நீங்காத எண்ணம் ஒன்று..
நெஞ்சோடு உண்டு..

ஆ: காணும் கனவுகள்
நீ கொண்ட ஆசை நினைவுகள்..
காணும் கனவுகள்
நீ கொண்ட ஆ..சை நினைவுகள்

பெ: ஆ..

ஆ: என்னென்ன சொல் இந்நாளிலே
நிறைவேற்றுவேன்

பெ: லல லல லல லா
தீராத ஆ..சைகள் ஓர் நாளில் தீ..ருமோ
வான் மாறலாம் நிலம் மாறலாம்
மாறாமல் இருவரும் இணைந்திருப்போம்

ஆ: நீங்காத எண்ணம் ஒன்று..
நெஞ்சோடு உண்டு
ஒரு ஷாஜஹான் ஒரு தேவதாஸ்
அது போலத்தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வர வேண்டும் ம்…

பெ: நீங்காத எண்ணம் ஒன்று..
நெஞ்சோடு உண்டு
ஒரு ஜானகி ஒரு கண்ணகி
அது போலத்தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வர வேண்டும் ம்..
Favourite songs
August 26, 2024
0

Search

Contact Me