கைபேசி எண்கூட சொல்லாமலே

கைபேசி எண்கூட சொல்லாமலே
கைவீசி சென்றாளே நில்லாமலே
நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை
போதாதோ நான் வாழும் காலம் வரை
அவளின் அழகு அனலை விடவும் அதிகம் கொதிக்குதே
கொதிக்க கொதிக்க குஷியில் எனது இதயம் குதிக்குதே
யார் மீது காதல் எப்போது பூக்கும்
யார் சொல்ல கூடும் சொல்லாமல் தாக்கும்
என் ஜாதகம் காதல் யோகம்


இதயத்தில் யார்க்கும் இடமில்லை என்று
தினசரி தாழ் போட்டு நான் பூட்டினேன்
உடைத்ததை நீயே உள் புகுந்தாயே
தலைவிதி உன் கையில் நான் மாட்டினேன்
உலகெல்லாம் உறங்கையில் உயிரை
நீ தயிரை போல் கடைகிறாய்
உணர்ச்சியில் கிறங்கையில் மனதை நீ
மலர் வண்டாய் குடைகின்றாய்
எனக்கென நீதான் எழுதிடும் கடிதம்
படிக்கிறேன் அன்பே உன் Facebook-ல் தான்
அடிக்கடி நான் தான் நிலைதடுமாறி
விழுகிறேன் கண்ணே உன் Gracelook - ல் தான்
விடையில்லா கேள்வி நீ
நிலக்கரி ஊழல் போல் நீழ்கிறாய்
தடைகளை தகர்த்து நீ
அடிமையை அரசி போல் ஆழ்கிறாய்
கைபேசி எண்கூட சொல்லாமலே
கைவீசி சென்றாளே நில்லாமலே
நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை
போதாதோ நான் வாழும் காலம் வரை
அவளின் அழகு அனலை விடவும் அதிகம் கொதிக்குதே
கொதிக்க கொதிக்க குஷியில் எனது இதயம் குதிக்குதே
யார் மீது காதல் எப்போது பூக்கும்
யார் சொல்ல கூடும் சொல்லாமல் தாக்கும்
என் ஜாதகம் காதல் யோகம்

Favourite songs
December 12, 2021
1

Search

Contact Me